September 11, 2017
தண்டோரா குழு
நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் தலைமையில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், வருகிற செப்டம்பர் 16-ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில்,பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த
பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் அன்றைய தேதியில் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த ஏற்கெனவே வேறு ஒருவர் அனுமதி பெறுவிட்டதால், டிடிவி தினகரன் தரப்புக்கு அனுமதி அளிக்கமுடியாது என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டிடிவி தினகரன் தலைமையில் மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.