• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நில மோசடி சம்பந்தமாக லாலு பிரசாத் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

May 16, 2017 தண்டோரா குழு

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரூ 1000 கோடி அளவுக்கு நில மோசடி வழக்கில் ஈடுப்பட்டுள்ளதாக அவரது வீடு உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லாலு பிரசாத் யாதவ் மகன் எம்.பி. பிசி குப்தாவின் வீட்டிலும், பிற தொழில் அதிபர்கள் வீட்டிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது

லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பினாமி நிலத்தை சட்டத்துக்கு விரோதமாக மாற்றியது தொடர்பாக சுமார் ரூ. 1000 கோடி அளவில் நடந்து உள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்து உள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மேலும் லாலு பிரசாத், அவருடைய மகளும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மிசா பாரதி மற்றும் அவருடைய இரு மகன்களும் ரூ. 1000 கோடி அளவில் நில மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக பா.ஜா.க குற்றம் சாட்டியது. இந்த மோசடி குறித்து மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுத்தவிர டெல்லி, குர்கான், ரேவாரி மற்றும் பிற இடங்களில் சில தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க