• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலவின் மறுபுறத்தில் தரையிறங்கிய விண்கலம் வரலாறு படைத்தது சீனா

January 3, 2019 தண்டோரா குழு

விண்வெளி ஆராய்ச்சியில் யாரும் எட்டாத மைல்கல்லை சீனா அடைந்துள்ளது. சீன நேரப்படி இன்று காலை 10.26 மணி அளவில் இதுவரை யாரும் சென்றடையாத நிலவின் மறுபக்கத்தை சீன விண்கலம் சாங்’இ-4 அடைந்தது.

நிலவை ஆய்வு செய்வதற்காக லாங் மார்ச்-3பி என்ற ராக்கெட் மூலம் சாங்’இ-4 என்ற சீனா செயற்கைக்கோள் இன்று நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பு மற்றும் உட்பகுதியை ஆய்வு செய்வதற்காக, லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த விண்கலம் வானியல் கூறுகளை ஆராய்தல், நிலவின் நிலப்பரப்பு, தாதுக்கள், கதிர்வீச்சின் அளவு, அணுக்கள் மற்றும் சூழல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இந்த விண்கலம் டிசம்பர் 2ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. பின்னர் தனக்குரிய சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. நிலவும் பூமியும் ஒரே சுற்று வட்டப்பாதையில் பயணிப்பதால் நிலவின் மறுபக்கம் இதுவரையில் காணப்படாத இருண்ட பகுதியாக இருந்தது. இதனால், நிலவின் இருண்ட பகுதியில் முதல்முறையாக தரையிறங்க திட்டமிட்டிருந்தது. இதுவரையில் நிலவின் மறுபக்கத்தை பார்க்க முடிந்ததே தவிர யாரும் அங்கு சென்று அடைந்ததில்லை. இந்நிலையில், சீனா ஏவிய சாங்’இ-4 செயற்கைக்கோள் இன்று நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா வரலாறு படைத்துள்ளது.

இதுவரை எந்தவொரு விண்கலமும் அங்கு தரையிறங்கியது இல்லை. நிலவின் மறுபுறத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் இதுவே ஆகும். மேலும், உயிரியல் தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக, உருளைக்கிழங்கு, பட்டுப்பூச்சிகள், விதைகள் ஆகியனவும் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க