• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிரம்பியது பில்லூர் அணை நிரம்பியது 4மதகுகள் திறப்பு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

October 18, 2019 தண்டோரா குழு

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு, கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதை கோவையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை நிரம்பியது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாகிய மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதையடுத்து பில்லூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 26ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். தற்சமயம் நீரின் அளவு 98 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடி வீதம் நான்கு மதகுகளின் வழியாக வெளியேற்றப்படுகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளால் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரப் பகுதி கிராமங்களாகிய தேக்கம்பட்டி, ஓடந்துறை,பாலப் பட்டி, ஆலாங்கொம்பு, சிறுமுகை ,ஜடையம்பாளையம் ஆகிய பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தாழ்வான பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க