• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூ இயர் ஈவென்ட் கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுல்

December 31, 2018 தண்டோரா குழு

நியூ இயர் ஈவென்ட் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.

நாளை 2019 புத்தாண்டு விழா உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். நட்சத்திர ஓட்டல்களில் சிறப்பு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதை ஒரு பகுதியாக புத்தாண்டை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் ஒரு புதிய அனிமேஷன் டூடுலை வெளியிட்டுள்ளது.

1998ம் ஆண்டு செப் 4ம் தேதி தொடங்கப்பட்ட கூகுள் தளத்தை இன்று உலகம் முழுவதும் சிறுவர் முதல் முதியவர்வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கடையில், தலைவர்கள் பிறந்த நாள், முக்கிய பிரபலங்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், புத்தாண்டை வரவேற்கும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் ஒரு புதிய அனிமேஷன் டூடுலை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு யானைக் குட்டிகள் பந்தை தூக்கி போட்டு விளையாடியபடி 12 மணி ஆகி 2019 ம் ஆண்டு பிறக்கக் காத்துக்கொண்டிருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டூடுல் பார்பவர்களையும் குழந்தைகளையும் அதிகம் கவர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க