• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாவல் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய Cerebral Palsy நோயால் பாதிக்கப்பட்ட சீன பெண்

December 15, 2017 தண்டோரா குழு

சீனாவில் Cerebral Palsy நோயால் பாதிக்கப்பட்ட பெண், நாவல் ஒன்று எழுதி வெளியிட்ட சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சீனா நாட்டின் தென்கிழக்குசினாஸ் சிசுவான் மாகாணத்தின், செங்க்டுவை சேர்ந்தவர் சென் யூவான்(34). அவர் Cerebral Palsy என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் தனது இடது கையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்தி, கணினி விசைபலகையின் உதவியுடன் 130,000 வார்த்தைகளை கொண்ட ‘Grandma on the Clouds’என்னும் நாவலை எழுதியுள்ளார். இதை எழுத அவருக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சென்னுக்கு 1 வயது இருக்கும்போது, அவருக்கு இந்த நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அவரை வளர்க்க, அவருடைய தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சென்னின் பாட்டி, அவரை வளர்க்க முன்வந்தார். அடிப்படை கணிதம், பாடங்களை எப்படி படிக்க வேண்டும் மற்றும் சென்னின் கல்விக்கு தேவையான உதவிகளை சென்னின் பாட்டி செய்துள்ளார்.

இருப்பினும், வகுப்பிலிருந்த மற்ற மாணவ மாணவிகளுடன் இணைந்து படிக்க முடியாத காரணத்தால், பள்ளிக்கு செல்வதை சென் கைவிட்டுவிட்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, அவருடைய பாட்டி புற்றுநோய் காரணமாக காலமானார்.

தற்போது, சென் சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள ‘Writers Association’னின் உறுப்பினராக இருக்கின்றார். கடந்த 2௦14ம் ஆண்டு, அவர் எழுதிய நாவல் வெளியாகியது. எனினும் இது குறித்து யாருக்கும் தெரியவில்லை தற்போது சென் பற்றி ஒரு படம் வெளியானது. அப்படத்தின் மூலம் தான் அவர் நாவல் எழுதியது தெரியவந்தது.

அந்த நாவல் மைக்ரோபிலிம் ஆகவும் வெளியாகி, பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க