June 23, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா பாதிப்பு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து வரும் 25ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“தமிழக முதல்வர் பழனிசாமி 25-06-2020 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள், மற்றும் அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.