• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

May 11, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. முடிவு வெளியான 10 நிமிடங்களில் மதிப்பெண்களை குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களையும் சேர்த்து 9 லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்படுகிறது. இதை முடிவை WWW.TN RESULTS.NIC.IN, WWW.DGE 1.TN.NIC.IN மற்றும் WWW.DGE 2.TN.NIC.IN ஆகிய இணையதளங்கள் மூலம் பார்க்கலாம்.

15-ம் தேதி அன்று WWW.DGE.TN.NIC.IN என்ற இணையதளத்திலும், 17ம் தேதி அன்று பள்ளியிலும் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனக் பள்ளிக் கல்வி சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மறுகூட்டலுக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதில் மொழி பாடங்களுக்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க