• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் பெண் தற்கொலை

November 1, 2019 தண்டோரா குழு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் ராஜலட்சுமி கார்டனை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா (23). இவர் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடமாக இவர் வீட்டில் சீசர் என்ற பெயரில் செல்லமாக நாய் வளர்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்தபோது, அவரது நாய் பயந்து சத்தமாக குறைத்துள்ளது. அப்போது அருகிலுள்ளவர்கள் இந்த நாயை எங்காவது கொண்டு போய் விடுகள் என்று கவிதாவின் தந்தையிடம் கூறியுள்ளனர்.

இதனால் பெருமாள் நாயை காரணம் காட்டி தனது மகளை திட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கவிதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அப்பா, அம்மா, பாட்டி மற்றும் தனது தம்பியிடம் சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளும் படி எழுதியுள்ளார். மேலும் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். வார, வாரம் கோயிலுக்கு போக வேண்டும் என்றும், எல்லோரும் என்னை மன்னித்துவிடுகள் என்று எழுதி வைத்துவிட்டு அதன்பிறகு தற்கொலை செய்துள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய்க்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க