• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாயை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் கடலில் மூழ்கி மரணம்

May 5, 2017 தண்டோரா குழு

துபாயில் கடலில் சிக்கிய நாயை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் கடலில் மூழ்கி பலியானார்.

மும்பை நகரிலுள்ள அந்தேரியைச் சேர்ந்தவர் நிதின் ஷெனாய்(41). அவர் தேஜோரா டெக்னாலஜீஸ் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொழில் விஷயமாக துபாய் செல்வது வழக்கம்.

சமீபத்தில் வேலை காரணமாக துபாய் சென்றுள்ளார். அங்குள்ள பாம் ஜுமைரா என்னும் கடற்கரையில் நடந்துக்கொண்டிருந்த போது, கடலில் ஒரு நாய் சிக்கி தத்தளித்து கொண்டிருந்ததை கண்டு, அதை காப்பாற்ற கடலில் குதித்த அவர் சடலமாக கரைக்கு திரும்பினார்.

“நிதினுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம். நீச்சல் குளத்தில் மட்டும் நீச்சலடிக்க தெரியும். கடலுக்குள் நீந்த தெரியாது. அவரில்லாமல் எப்படி வாழப்போகிறேனோ தெரியவில்லை” என்று கண்ணீருடன் நிதின் மனைவி தெரிவித்தார்.

கடலில் மூழ்கியதால் தான் நிதின் மரணமடைந்தார் என்று துபாய் காவல்துறையினர் இறப்பு சான்றிதழ் தந்து, அவருடைய உடலை இந்தியாவிற்கு எடுத்து செல்லலாம் என்று துபாயின் அல் ஹம்ரியா நகரிலுள்ள இந்திய தூதர அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க