• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சக்கட்டம் – கமல்

February 4, 2019 தண்டோரா குழு

நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சக்கட்டம் என மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

மேற்குவங்காலத்தை போல் தர்ணா போராட்டம் தமிழகத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். நடக்கல ஏன்னென்றால் அவ்வளவு பெரிய அழுத்தம் மேலிருந்து வந்தால் எந்த சுயமரியாதை உள்ள அரசும் ஏற்காது. அதனுடைய பிரதிபலிப்பாக இருக்கலாம். முழு அரசியல் தமிழர்களுக்கு விளக்க வேண்டியதில்லை. நம் நிலைமையை விளக்கலாம். நவீனத்தை ஏளனம் செய்யக்கூடாது. அதே சமயம் ஓட்டை உள்ள தண்ணீர் அள்ள முடியாது. பக்கெட்டில் ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சக்கட்டம். நமக்கும் வாழ்வதற்கு இடம் அளித்துள்ளது உலகம். நமக்காக தான் உலகம் என்பது தவறு. அதற்கான விளைவுகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.தமிழக அரசின் தனி குனாதீசியம். பல வருடங்களாக பார்த்து வருகிறோம். இரு நாக்கு உடையவர்கள். பிரதமர் தமிழகத்திற்கு பேரிடரின் போது வராமல் தற்போது அடிக்கடி வருவது தேர்தல் தான் காரணம் மக்கள் அல்ல. பிரதான கட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதைப்பற்றி விவாதிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க