• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்?’ – முதல்வர் பழனிசாமி

August 28, 2019 தண்டோரா குழு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில், முதல்வர் பழனிசாமி 14 நாள் பயணமாக, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கும், துபாய் நகரத்திற்கும் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இன்று துவங்கி செப்.,10 வரை அவர் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலில் லண்டன் செல்லும் முதல்வர் பழனிசாமி அங்கு சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இதனை தொடர்ந்து லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட உள்ளார். பின்னர் இந்துஜா உள்ளிட்ட தொழில் முதலீட்டாளர்களையும் அவர் சந்திக்கிறார்.

இதற்காக இன்று காலை 9:45 மணிக்கு, ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டன் புறப்பட்டு சென்றார். முதல்வருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள், முதல்வர் அலுவலக அதிகாரிகள், துறை செயலர்கள் சென்றனர்.

வெளிநாடு செல்வதற்கு முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே இந்த வெளிநாட்டு பயணம். 3 நாடுகளின் அரசுகள் அழைத்ததன் பேரில் வெளிநாடு செல்கிறேன். 3 நாட்டு அதிபர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து பேச உள்ளேன் என்றார். மேலும், ஸ்டாலின் அடிக்கடி சொந்த வேலையாக வெளிநாடு செல்கிறார். ஒரு முதல்வர் என்ற முறையில் நான் வெளிநாடு செல்வதை கொச்சைபடுத்துகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட உடன் தொழிற்சாலைகள் துவங்கப்படும். நான் ஒன்றும் தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாயி. முதல்வர் என்ற முறையில் நேரில் சென்று அழைத்தால் தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வருவார்கள் என்றார்.

மேலும் படிக்க