November 7, 2017
தண்டோரா குழு
நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது என்று கூறிய நடிகர் கமலஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்,
மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளன.பிரச்னைகளுக்கு எதிரான நியாயக் குரலை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும்,கட்சியின் பெயரை அறிவிக்க இப்போது அவசியமில்லை,அவசரமில்லை.சினிமா எடுப்பதற்கே 6 மாத முன்னேற்பாடுகள் செய்பவன் நான் அரசியல் அதைவிடப் பெரிய பணி.அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.கட்சியை தொடங்கும் முன் அடித்தளத்தைப் பலப்படுத்த வேண்டியிருக்கிறது.
அக்கிரமங்களுக்கு எதிராக தரப்படும் குரல் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.மக்கள் பிரச்னைகளைப் பேச ’MAIAMWHISTLE’ என்ற பெயரில் புதிய #TAG அறிமுகம் செய்த கமல், #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம் செய்தார்.
நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு.தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறு.நல்லது செய்வதையும் பண்பறிந்து, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.