• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் ஏன் அண்டாவில் பால் அபிஷேகம் செய்ய சொன்னேன் – சிம்பு விளக்கம்

January 28, 2019 தண்டோரா குழு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து, சமீபத்தில், இப்படத்திற்கு ‘கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம்’ என சிம்பு
வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பின்னர் கடந்த வாரம்’இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு எனக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள்’ என ரசிகர்களுக்கு கட்டளையிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனால் சிம்பு மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு,

“கடந்த ஒரு வருடத்திற்கு முன் என்னுடைய ரசிகர் ஒருவர் கட்அவுட் இறந்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணாமாக நான் என் படத்திற்கு கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஏதோ ஒரு விஷயத்தை நெகட்டிவாக கூறினால்தான் போய் சேருகிறது. அதனால்தான் அண்டாவில் பால் ஊற்றுமாறு கூறினேன். நான் பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேனே தவிர எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என நினைக்கலாம். நான் மாற்றி பேசவில்லை அனைவரும் மாற வேண்டும் என்று தான் பேசுகிறேன். பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உயிரில்லாத ஒரு கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவதைவிட, உயிருள்ள மனிதர்களுக்கு வழங்குமாறு கூறினேன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியதை நான் மறப்பவன் அல்ல.

நல்ல விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதை தவறான முறையில் கூறியதாக நீங்கள் கருதினால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் கூறுவதை சர்ச்சையாக ஆக்க சிலர் முயற்சிக்கின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க