September 3, 2020
தண்டோரா குழு
நாட்டின் முன்னணி எஃப்எம்சிஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா, நாட்டில் கிக் பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
சமூக வணிகத்துடன் தொழில்முனைவோர் ஆற்றலை கட்டவிழ்த்து விடுவதில் கவனம்செலுத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள உலகளாவிய ஏ70 பல்லாண்டு வளர்ச்சி உத்தியை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.இந்த பல்லாண்டு வளர்ச்சி உத்தியின் ஒரு பகுதியாக,கிக் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஒரு முக்கிய உலகளாவிய மாபெரும் போக்காக ஆம்வே இந்திய அடையாளம் கண்டுள்ளது. இதன் அடிப்படையிலும்,இந்திய பொருளாதார மறுமலர்ச்சியை ஆதரிக்கும் அதன் முயற்சியாகவும்,ஆம்வே இந்தியா அதன் நேரடி சில்லறைவணிகர்கள்/விற்பனையாளர்களின் வளர்ச்சிக்கு உதவுவதிலும் அவர்களது லாபகரமான,நிலைத்த வெற்றிக்கான வணிக உருவாக்கத்துக்காக புதிய ஆதாரங்களை உண்டாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது.
இதை பற்றி ஆம் வே இந்தியாவின் சிஇஓ அன்ஷு புத்ராஜா கூறுகையில்,
“தற்போது, இந்தியா உலகத்தின் மிக இளம் மக்கள் தொகையில் ஒன்றை கொண்டுள்ளது. அதன் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள். சமீபத்திய ஒரு அசோசாம் அறிக்கையின்படி இந்தியாவின் கிக் பொருளாதாரம் 17% சிஏஜிஆர் அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 2023 இல் அது $455 பில்லியன் மொத்த வால்யூமை அடையக்கூடும். வேலைச் சந்தை ஒரு நிலப்பெயர்வு மாற்றத்திற்குள்ளாக செல்லும் இந்த வேளையில், 35வயதுக்கு கீழ்ப்பட்ட வகையினரிடம் இருந்து அதன் வணிக மாதிரிக்கு மாபெரும் ஆர்வப் பெருக்கை ஆம்வே இந்தியா கண்டது. இல்லையெனில் இவர்கள் நெகிழ்வான பங்குகளையே கிக் பொருளாதார சூழலமைப்பில் நாடுவார்கள். இன்றைய விநோதச் சூழலில் இதுவே ஒரு போக்காக உள்ளது.இன்று, இரண்டாவது காலாண்டில் மட்டும்வணிக வாய்ப்பை தேடுவோர்களின் எண்ணிக்கை 54% அதிகரித்துள்ளதை காண்கிறோம். இதில் 64% புதிய பதிவுகள் 35 வயதுக்கு குறைவான வகையை சார்ந்தவர்கள். இது எங்கள் தயாரிப்பு வரம்பு மற்றும் வணிக வாய்ப்பை நோக்கி ஒரு வலிமையான ஈர்ப்பை காட்டுகிறது.
மேலும், தற்போது ஆம்வே வாடிக்கையாளர்களில் 53% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் எங்கள் உயர்- தர தயாரிப்புகளை நுகர்வதிலேயே ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து திறன் அளிக்கும் முன்முயற்சிகளாலும் உலக தரம் வாய்ந்த தயாரிப்புகளாலும் எங்கள் நேரடி விற்பனையாளர்கள் வெற்றி பெறவும் தங்கள் வணிகத்தில் வளரவும் உதவ நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என்று கூறினார்.