• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

December 26, 2018 தண்டோரா குழு

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. வங்கிகள் இணைப்பைக் கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 26-ம் தேதியான இன்று ஒன்பது வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிதிருந்தனர்.

இந்நிலையில், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில், 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்கி ஊழியர்கள் 85 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வங்கி சேவைகள் பாதிப்படைந்தன. மேலும், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க