• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தல் 2019: தங்கள் வாக்கினை பதிவு செய்த அரசியல் கட்சி தலைவர்கள்

April 18, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

நாடாளுமன்ற 2-ம் கட்டத் தேர்தலில் 11 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் தேர்தலில் மட்டும் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,95,94,923 பேரும், பெண் வாக்காளர்கள் 3,02,69,045 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5,790 பேரும் அடங்கும். தேர்தல் பணியில் மட்டும் 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் , திரைப்பிரபலங்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் வரிசையில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கை பதிவு செய்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ரவீந்திரநாத்தும் வாக்களித்தார்.

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி

சென்னை அடையாறில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தமிழ்நாட்டின் உரிமைகள் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஆட்சி மாற்றத்துக்காக தமிழக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார்.

கனிமொழி

சென்னை மயிலாப்பூரில் புனித எப்பாஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கனிமொழி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, திமுக கூட்டணி வேட்பாளர்கள் மிக சிறப்பான வெற்றியை பெறுவார்கள் என்று தெரிவித்தார். எதிர்கட்சிகளை மட்டும் குறிவதை்து சோதனை நடத்தப்பட்டதாக கனிமொழி தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நீன்ட வரிசையில் நின்று வாக்களித்தார். கமலுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் வாக்களித்தார். முன்னதாக கமல் வாக்களிக்க இருந்த வாக்குச்சாவடியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

சென்னை சாலிகிராமத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்.

விஜயகாந்த், ராமதாஸ்

சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் தனது வாக்கை பதிவு செய்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க