தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து சில கட்சிகளுடன் பேசிவருவதாக அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவிதினகரன் தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள 20 தொகுதிகள், வரக்கூடிய 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. திமுக, காங்கிரஸ்கூட்டணி உறுதியாகி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பிளவுபட்டுள்ள அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் நிலைமை குறித்து தெரியவில்லை. அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி திமுகவில் ஐக்கியமாக, டிடிவிதினகரன் உள்ளிட்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாகளை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில்,
நாங்கள், கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசிவருகிறோம். பின், தனித்து போட்டியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் செழுமை பெற்ற சத்துணவு திட்டத்தை சிறந்தமுறையில் தமிழகஅரசு செயல்படுத்தவில்லை. 25க்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை தொடர்ந்து நடத்தாமல் இருக்க நினைப்பது தமிழக அரசின் இயலாமையைகாட்டுகிறது.
மேலும், முதல்வர் செயல்பாடு சரியில்லை சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மேற்கொண்டுள்ள முடிவை திரும்ப பெறவேண்டும் என்று அமமுக வலியுறுத்துகிறது.
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்!