• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி.

January 31, 2017 தண்டோரா குழு

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியபோது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. மயங்கி விழுந்தார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் உரையின்போது, நாடாளுமன்ற அவைக்குள் திடீரென, மக்களவை உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவருமான அகமது மயங்கி விழுந்தார். இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மயக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க