சீனாவின் நான்ஜிங் பலகலைக்கழகத்தின் 115வது ஆண்டு விழாவை முன்னிட்டு 115 தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது.
சீனாவின் ஜியங்க்சு மாகணத்திலுள்ள பிரபல நான்ஜிங் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகத்தின் 115ம் ஆண்டு விழா நேற்று(ஞாயிற்றுக்கிழமை 21) நடைபெற்றது. அந்த விழாவின் சிறப்பு அம்சமாக,சுமார் 115 தம்பதிகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 57 பழைய மாணவர்கள் ஜோடி, 6 பள்ளி ஊழியர்கள் ஜோடி மற்றும் 52 தற்போது படிக்கும் மாணவர்கள் ஜோடி என 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கல்லூரியிலேயே திருமணம் நடத்தியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் ஒரு காலில் மண்டியிட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி, தங்களை திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டனர்.பெண்களும் அவர்களை தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள் சம்மதம் தெரிவித்தனர். பின்னர், முறையாக திருமணம் நடந்தது. கணவனும் மனைவியுமாக இணைந்த பிறகு, அன்புடன் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து, தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
சீனாவில் பழமையான இந்த பல்கலைக்கழகம், 19௦2ம் தொடங்கப்பட்டது. 13,583 இளங்நிலை பட்டதாரிகள், 10865 முது நிலை பட்டதாரிகள், 5,335 முனைவர் மாணவர்கள் மற்றும் 3,.216 முழு நேர சர்வதேச மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்