August 15, 2020
தண்டோரா குழு
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் வேவமாக வளர்ந்து வருகிறது. குறிபாக கோவை வாளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு பூங்காவும் ஒன்று இந்த பூங்காவை சமீபத்தில் கோவை வந்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாணடமாக அமைக்கப்பட்டுள்ள “I LOVE COVAI” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் 74 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இந்த வாசகத்தின் மீது சுதந்திர போராட்ட வரலாற்றையும், அதற்காக பாடுபட்ட வீரர்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் விதமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒளிவெள்ளத்தில் காட்சி அமைக்கப்பட்டது. மேலும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கு அனுமதியளித்த மாண்புமிகு தமிழக முதல்வர், துணைமுதல்வர், மற்றும் கோவையில் ஸ்மார் சிட்டி பணிகளை நேரடியாக சிறப்பு கவனம் செலுத்தி கோவைக்காக பாடுபட்டுவரும் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோரின் புகைப்படங்களும் வரும் வகையில் ஒளி அமைக்கப்பட்டு இருந்தது.இதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜவடேகர் IAS, துவக்கி வைத்து பார்வையிட்டார்.