• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நண்பர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடிய சாமியார் கைது

December 10, 2021 தண்டோரா குழு

கோவையில் நண்பர் வீட்டில் ரூ.3 லட்சம் திருடிய சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கோவை நீலிகோனாம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கவுதம்(39). திருமணமாகாதவர். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவர் அடிக்கடி விருதுநகரில் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அங்கு அவருக்கு சாமியார் ராஜேந்திரன்(எ) அன்பே சிவம்(45)பழக்கமானார். இருவரும் மிகவும் நட்பாக பழகி வந்தனர்.

அவர்களின் நட்பு நாளடைவில் சாமியார் ராஜேந்திரன் கோவைக்கு வந்தால் கவுதம் வீட்டில் தங்கி செல்லும் அளவுக்கு வளர்ந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் சாமியார் ராஜேந்திரன் கோவை வந்து கவுதம் வீட்டில் தங்கினார். அப்போது கவுதம் தனது வீட்டின் கீழ் போர்சனை போக்கியத்துக்கு விட்டு அதன்மூலம் கிடைத்த ரூ.3 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் ரூ.3 லட்சத்தை காணவில்லை. சாமியார் ராஜேந்திரனும் அங்கு இல்லை. அவர் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம் அவரது செல்போனுக்கு தொடர்பு கொள்ளமுயற்சித்தார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கவுதம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். கோவையில் தலைமறைவாகியிருந்த சாமியார் ராஜேந்திரன்(எ) அன்பேசிவம் என்பவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க