• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பெண்

June 27, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து Southwest Airlines Flight 4519 காலை சுமார் 8 மணியளவில் புறப்பட்டு டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகருக்கு மதியம் 1.3௦ மணியளவில் தரையிறங்குவது வழக்கம்.

அதேபோல், Southwest Airlines Flight 4519 இன்று(ஜூன் 27) காலை சுமார் 8 மணியளவில் புறப்பட்டு தனது பயணத்தை தொடங்கியது. ஆனால், நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் பயணி விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே விமான ஓட்டுனர், டெக்சாஸ் மாநிலத்தின் கார்பஸ் கிறிஸ்டி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில்,

“அந்த பெண் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலேயே அந்த பெண் விசித்திரமான முறையில் நடந்துக்கொண்டிருந்தாள். ஏதோ சரியில்லை என்று எனக்கு தோன்றியது. ஒரு நாப்கின் ஒன்றில் ‘உதவி செய்யுங்கள் என்று எழுதி அவளுடைய பெயரையும் எழுதி தந்தாள். விமானம் ஏறியதும், இருக்கையில் அமராமல் மேலும் கீழுமாக நடந்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றாள்.

கார்பஸ் கிரிஸ்டி விமானநிலையத்திற்கு வந்தவுடன் தொந்தரவு கொடுத்த அந்த பயணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு, விமானம் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானங்களில் கடந்த 46 வருடங்களில் விபத்தும் எதுவும் நிகழ்ந்ததில்லை என்பதால் மிகவும் நம்பமான ஏர்லைன்ஸ் என்று கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க