• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிப்பது என் தொழில் கட்சி என் கடமை – கமல்ஹாசன்

January 16, 2019

நடிப்பது என் தொழில்கட்சி என் கடமை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன்,

60 வருடங்களாக எப்படி தோளில் தூக்கி என்னை கொண்டாடினார்களோ அதே போல் தற்போதும் என்னை தலைவனாக மக்கள் கொண்டாடுகிறார்கள்
நான் என் கடமையை செய்ய வந்துருக்கிறேன்.கொடநாடு துரோகத்தின் சீற்றமாக மாறியிருக்கிறது.தொண்டர்கள் கட்சியை நோக்கி நகருவதை விட கட்சி தொண்டர்களை நோக்கி நகருவதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதை கட்சி முடிவு செய்யும்.டெல்லியை நீக்கிவிட்டு தமிழகத்தில் தனியாக அரசியல் நடத்த முடியாது.

கொள்கைக்காக திட்டங்கள் மாற்றப்படும் பெண்களின் நலன் , கல்வி ,வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் திண்டாட்டம். மக்களோடு பயணித்து அவர்களது குறைகள் தீர்க்கப்படும்.மக்களிடம் இருந்து பெற்று மக்களுக்கே கொடுப்பது இலவசம் இல்லை.
தமிழகம் முன்னேற வேண்டும்.
கொடநாடு விவகாரம் மக்கள் சாற்றும் குற்றம் இதில் எவ்வித அரசியலும் இல்லை.நடிப்பது என் தொழில்
கட்சி என் கடமை. கண்டிப்பாக எழுவோம் என்று நம்புகிறேன். உங்கள் கனவுகள் எங்கள் கண்களில் தெரிய வேண்டும். உங்கள் கனவுகளை நினைவாக நாங்கள் பாடுபடுவோம்.
இளைய தலைமுறை இந்திய அரசியல் மற்றும் தமிழாக அரசியலை மாற்றி அமைக்க உள்ளது.நண்பர்களுக்கு நல்வழி காட்டும் கடமை உங்களிடம் உள்ளது.விவசாயிக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரைகளும் கிடைக்க வேண்டும்.விவசாயிகள் நிறைந்த கட்சியாக இருக்கும். மக்கள் மத்தியில் ஓட்டு போடும் விழிப்புணர்வை முதலில் உருவாக்க வேண்டும். மக்களே ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் உங்களை அடுத்த வருடத்திற்கு விலைக்கு வாங்க சில கலவாணிகள் காத்திருக்கிறார்கள்.

பொள்ளாச்சியில் கட்சி அலுவலகம் திறந்தது மகிழ்ச்சி.தலைமை சந்திக்க தொண்டர்கள் காத்திருக்க தேவையில்லை தொண்டர்களுக்காக இந்த தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க