• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்

February 26, 2018 தண்டோரா குழு

நடிகை ஸ்ரீதேவி குளியலறை தொட்டியில் உள்ள நீரில் தவறுதலாக விழுந்து மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது   மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளில் ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், குளியலறையில் உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவி மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.  நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது மரணம் விபத்து என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஸ்ரீதேவி மரணத்தில் சதிச் செயல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றும் குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கிய போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ஸ்ரீதேவி ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும் உடற்கூறாய்வு சோதனையில் தெரிய வந்துள்ளதாக துபாய் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளது.

 

மேலும் படிக்க