• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை பூர்ணா மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கு – கோவை வாலிபர்கள் 2 பேர் கைது

July 30, 2020 தண்டோரா குழு

நடிகர் பூர்ணிமாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவை வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களிடம் பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

பிரபல மலையாள சினிமா நடிகையான பூர்ணா தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் கொச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த நாலு பேர் பூர்ணாவை துபாய் தொழிலதிபர் ஒருவர் பெண் பார்க்க வருவதாக கூறியுள்ளனர். அப்போது பூர்ணாவின் தாயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.4 பெரும் அவரிடம் பேசிவிட்டு பூர்ணாவின் செல்போன் எண் மற்றும் புகைப் படத்தை வாங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை செல்போனில் தொடர்புகொண்ட ஒருவர் பெண்கேட்டு வந்த துபாய் தொழிலதிபர் நான்தான் என்று எனக்கு அவசரத் தேவைக்காக ரூபாய் ஒரு லட்சம் பணம் தேவை என்றும் மிரட்டும் வகையில் கேட்டுள்ளார்.அப்போது முன்னுக்கு பின் முரணாக அந்த நபர் பேசியுள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த பூர்ணா கொச்சி மரடு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி இதுவரை செரீப், ரபீக் உள்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன இதன்படி இந்த கும்பல் இதுபோல் பலரையும் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.மேலும் இந்த கும்பல் மாடல் அழகிகள் உள்பட இளம்பெண்களை சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளனர். இளம்பெண்களை படப்பிடிப்புக்கு என அழைத்து சென்று பாலக்காட்டில் ஒரு ஓட்டலில் அறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக கூறபடுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கோவையைச் சேர்ந்த நசீப் ராஜா (27), ஜாபர் சாதிக் (27) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை பாலக்காட்டுக்கு அழைத்துச்சென்று ஓட்டலில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தி பணம் வசூலித்த சம்பவத்திலும் இவர்கள் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் தங்கள் பெயர்களை கண்ணன், ரிஷி என மாற்றி பல பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதை தொடர்ந்து இரண்டு பேரும் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இத்துடன் நடிகையை மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க