• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை பிரியங்கா சோப்ராவுடன் மலாலா சந்திப்பு

September 21, 2017 தண்டோரா குழு

நடிகை பிரியங்கா சோப்ராவுடன் நோபல் பரிசு பெற்ற மலாலா நியூயார்க்கில் சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் போது, பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மலாலா பள்ளிக்கு சென்றார். பெண்கள் கல்வி பெற வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார். தன்னுடைய வீர செயல் காரணமாக சுடப்பட்டார். இருப்பினும் லண்டன் நகரில் சிகிச்சை பெற்ற பிறகு, தனது கல்வியை தொடர்ந்தார். தற்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தனது மேல் படிப்பை படித்து வருகிறார்.

இந்நிலையில், யுனிசெப் நல்லெண்ண தூதராக இருக்கும் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை நியூயார்க் நகரில் சந்தித்து பேசினார். அவர்களுடைய சந்தித்த பிறகு, பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது:

மலாலா, உங்களிடம் இருக்கும் கணக்கிட முடியாத சக்தியை உலகம் அறிந்திருக்கிறது. இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. இந்த இளம் வயதில் நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் மிகப்பெரிய பொறுப்புகளை என்னால் உணர முடிகிறது. உங்களை பார்க்கும்போது, எனக்கு பெருமையாக இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் பெண்களை நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள். உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க