October 30, 2017
தண்டோராகுழு
போலி முகவரியில் நடிகை அமலாபால் கார் வாங்கியது குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்திரவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் புதுசேரியில் 1 கோடிக்கும் அதிகமான விலையில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை புதுச்சேரியில் தன்னுடைய நிரந்தர முகவரி என கூறி பொய்யான முகவரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாகனம் வாங்கி வரி ஏய்ப்பு செய்த அமலாபால் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு விட்டுள்ளார்.மேலும் இனி வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுசேரியில் வாகனம் வாங்குவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.