• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த ஜெயப்பிரதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்

March 26, 2019 தண்டோரா குழு

1970களில் இறுதி முதல் 1990களின் தொடக்கம் வரையில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைத்துறைகளில் கோலோய்ச்சியவர் நடிகை ஜெயப்பிரதா ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் என்னற்ற படங்களில் நடித்து பிரபலமாக திகழ்ந்த இவர். 1994ல் என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுடனான மனக்கசப்பினால் அக்கட்சியில் இருந்து விலகி முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் இரண்டு முறை எம்.பியாக பதவி வகித்த ஜெயப்பிரதா நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். இது எனது வாழ்வின் மிகமுக்கிய தருணம், நாட்டின் பாதுகாப்பு குறித்து விவகாரங்களை முக்கியமாக கருதும் தலைவர்கள் உள்ள தேசிய கட்சியின் அங்கமாக மாறியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பிஜ்னோர் தொகுதியில் பாஜக வேட்பாளர் குன்வர் பர்தேந்திராவிடம் ஜெயப்பிரதா போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் பாஜகவில் இணைந்துள்ள ஜெயப்பிரதா உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க