• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகா் ரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை – சீமான் பேட்டி !

August 15, 2019 தண்டோரா குழு

ரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

370-வது சட்டப்பிரிவை ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு ரத்து செய்தது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று குற்றம் சாட்டினார். வரும் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை.ரஜினிகாந்தே பாஜகவை சேர்ந்தவர்தான் என்பதால் அவர் பிரச்சாரம் செய்வது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று கூறினார். ஆகச்சிறந்த நல்ல படங்களை எல்லாம் புறக்கணித்ததால் தேசிய விருதுகளுக்கு தான் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க