• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் !

June 22, 2023 தண்டோரா குழு

தளபதி விஜய் பிறந்த நாளை நற்பணி நாளாக கொண்டாடும் விதமாக கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி சார்பாக கோவையின் பல்வேறு பகுதிகளில்,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவுறுத்தலின் படி, தளபதி விஜய் பிறந்தநாள் விழா காலையில்,கோணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் கிறிஸ்தவ ஆலயத்திலும்,திருச்சி சாலையில் உள்ள ஜங்கிலி பீ தர்காவிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.

இதனைதொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், என தளபதி விஜய்யின் பிறந்த நாளை கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணியினர் உற்சாகமாக கொண்டாடினர்.இதில் சிங்கை நகர சுரேஷ், மற்றும் சதீஷ் சார்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்,தெலுங்குபாளையம் அஜீத்,சபரி, செல்வபுரம் சுரேந்திரன்,வசந்த் சார்பாக பத்தாயிரம் ரூபாய் மருத்துவ உதவி,கருமத்தம்பட்டி மகளிர் அணி மோகனபிரியா தலைமையில்,அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், சூலூர் ஒன்றிய நிர்வாகிகள் சத்திய சுந்தரம்,கணேஷ் ஆகியோர் சார்பாக புதிய பெயர் பலகை திறப்பு, கொடியேற்றுதல், மதிய உணவு வழங்குதல்,கணியூர் பகுதி பாலு மற்றும் பாலா சார்பாக மதிய உணவு,ரோட்டோரத்தில் இருக்கும் யாசகம் கேட்பவர்களுக்கு வழங்கப்பட்டது..

மாவட்ட மாணவரணி சார்பாக ஆயிரம் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க