• Download mobile app
02 Jun 2024, SundayEdition - 3035
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

July 24, 2017 தண்டோரா குழு

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

பிப்ரவரி 17-ம் தேதி பிரபல கேரள நடிகையை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட 6 பேரை கேரளா போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையில் “நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்” என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதித்திட்டார்.

இதனால் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.எனினும் நடிகர் திலீப், கேரள நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க