• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம்!

November 19, 2019 தண்டோரா குழு

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். 65 வயதாகும் கமல்ஹாசன் திரைத்துறையை 60 ஆண்டுகளாக கட்டி ஆண்டு வருகிறார்.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி கமல் சினிமாவில் நடிக்க தொடங்கி அறுபது வருடங்கள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்றொரு நிகழ்ச்சியும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, கமல்ஹாசனை பாராட்டினர். இளையராஜாவின் இசை கச்சேரியும் நடைபெற்றது.

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் இவர் தேசிய விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒடிசாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.கமலஹாசனும் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க