November 21, 2020
தண்டோரா குழு
தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில்உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெண்ணிலா கே.ரவிக்குமார்
இவர் இயக்கும் “யாழினி” என்ற குறும் படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில், நேற்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இக்குறும் படத்தின் போஸ்டரை பிரபல திரைப்பட நடிகர் அருண்விஜய்
வெளியிட்டார்.
இதுபற்றி இயக்குனர் வெண்ணிலா கே.ரவிக்குமார் கூறியதாவது:
உலகத்தில் உயிர் வாழ நாம் அனைவரும் ஓடி ஓடி உழைக்கிறோம்.உண்மையில் நாம் உடல் உயிர் வாழ நம் உடலுக்குள் ஆயிரமாயிரம் அணுக்கள் உழைக்கிறது.ஒரு பெண்ணின் உடலுக்குள் ஒரு அணுவின் செயல்பாடு குறைவானால் அவள் வாழ்வியல் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை *யாழினி* என்ற கதாபாத்திரம் மூலம் சொல்லப் போகிறேன்.
என் கதையின் நாயகி நீங்கள் எதிர்பார்க்கும் பெண்தான்.ஆனால் சராசரி பெண்ணல்ல.
அவளுக்கு நிலவு போல இருளான ஒரு பக்கமும் இருக்கிறது. இப்படத்தின் போஸ்டரை பாசத்துக்குரிய நடிகர் அருண்விஜய் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சியையும்.. உற்சாகத்தைத் தருகிறது. விரைவில் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இக்குறும்படத்தில் சிவவாஞ்சி.விஜய் லோகன். சாப்ளின் பாலு. அரவிந்த்.டாக்டர் பினு. ரஷீத். ஹாஜகான்.கரூர் வள்ளி. சாரதா. சீதா. ஜூலி. ஜோஷிதா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.யாழினி என்ற பிரதான கதாபாத்திரத்தில் டிக்டாக் மூலம் பலரை கவர்ந்த ராகினி தேர்வு செய்யபட்டு உள்ளார்என்றார்.
இப்படத்திற்கு சிவக்குமார்.அன்னை செல்வம். அஜந்தா கார்த்தி ஆகிய 3 பேர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.தப்பாட்டம் திரைப்படத்திற்கு இசையமைத்த பழனி பாலு இசையமைக்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் பொள்ளாச்சி ரத்தினம் மற்றும் வெண்ணிலா சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். *யாழினி* போஸ்டர் டிசைனை பார்த்து பல திரைப்பட இயக்குனர்களும் நடிகர்களும் திரை கலைஞர்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
பிரபல இயக்குனர்கள் பீ.லெனின்
கோகுல கிருஷ்ணா.காளிரங்கசாமி அஸ்லாம் உட்பட ஏராளமான இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெண்ணிலா கே.ரவிக்குமாரின் முந்தைய படைப்பு “நானும் சுப்ரமணியும்” விரைவில் வெள்ளித்திரை படமாக வெளிவர உள்ளது.