• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்!

April 13, 2019 தண்டோரா குழு

நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

கானல் நீர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜேகே ரித்தீஸ். அதன்பின் நாயகன், பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ரித்தீஷ் சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அழகிரியின் ஆதரவாளராக இருந்த இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் சங்கப் பிரச்சினையில் நடிகர் விஷாலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ரித்திஷ் சில மாதங்களுக்கு முன் நெஞ்சு வலியின் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல்நலம் தேறியபின் வழக்கம்போலவே அரசியல் பணிகளை கவனித்து வந்தார்.இந்நிலையில் இன்று மதியம் இராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவருக்கு திடிரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, இராமநாதபுரத்தில் உள்ள பரணிகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரித்தீஷின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுசெல்லப்படுகிறது. இலங்கை கண்டியில் பிறந்த ரித்தீஷ்-க்கு 46 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க