• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நக்மா, குஷ்புவுக்கு சீட் இல்லை? கட்சியில் சேர்ந்த இரண்டே நாளில் நடிகை ஊர்மிளாவுக்கு சீட் !

March 29, 2019 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 2 நாட்களில் நடிகை ஊர்மிளா மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஊர்மிளா மடோன்த்கர். இவர் கடந்த புதன்கிழமை ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பின்னர் ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த இரண்டே நாளில் நடிகை ஊர்மிளா மதோன்கர் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. மும்பை காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து கட்சி தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாக கட்சி தலைவர் கூறியுள்ளார்.

மும்பை காங்கிரசின் தலைவராக இருக்கும் மிலிந்த் தியோரா ஊர்மிளாவின் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது மும்பை வடக்கு மக்களவை தொகுதி பாஜக வசம் உள்ளது. இங்கு பாஜக தரப்பில் கோகுல்நாத் ஷெட்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஊர்மிளா களத்தில் நிறத்தப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள 5 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏற்கனவே 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்மிளா வடக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரை 293 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே உள்ள நடிகைகள் நக்மா, குஷ்பு ஆகியோருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க