• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகை பறித்ததாக வாலிபர் மீது தாக்குதல்

October 20, 2021 தண்டோரா குழு

நகை பறித்ததாக வாலிபர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (20). கார்பெண்டர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ரபித் மற்றும் மனோஜ் ஆகியோருடன் இடையர்பாளையத்தில் உள்ள காலி மைதானத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் அஜித்குமாரிடம், இடையர்பாளையத்தில் ஒரு பெண்ணிடம் நகை பறித்தது நீதானே? என கேட்டு தகராறு செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அஜித்குமாரை அவர்கள் இரும்பு ராடால் தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து அஜித்குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், அவரை தாக்கியது இடையர்பாளையம் மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (27), குனியமுத்தூரை சேர்ந்த சசிதரன் (23), இடையர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்த மோதிலால் (21) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாக்கப்பட்ட அஜித்குமார் கடந்த ஆண்டு நகை பறிப்பில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க