• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகை சீட்டு திட்டங்களை கண்காணிக்க குழு அமைக்க கோரி மனு

June 12, 2017 தண்டோரா குழு

நகைகடைகளில் உள்ள நகை சீட்டு திட்டங்களை கண்காணிக்க ஒரு ஆய்வு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அகில பாரத இந்து மகா சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் பல்வேறு நகைக்கடைகளில் நகை சீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெரும்பாலும் இத்திட்டத்தில் நடுதர மக்களும், கூலிக்கு வேலைக்கு செல்வோரும் தான் அதிக அளவில் சேர்கின்றனர்.

மேலும் மக்களை கவரும் வகையில் 3 மாத தவனை திட்டம், 6 மாத திட்டம் , பத்து மாத திட்டம் என பல்வேறு வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“இத்திடத்தில் சேரும் மக்கள் பெரும்பாலும் பல்வேறு வறுமை காரணங்களால் மாத தவணையை முழுமையாக செலுத்த முடிவதில்லை. அவ்வாறு தவிக்கும் மக்கள் தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டால் நகைக்கடை உரிமையாளர்கள் தருவதில்லை மாறாக அவர்களை அப்பணத்திற்கு நகை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக நூதனமான முறையில் மக்களின் பணங்களை சேமிப்பு என்ற முறையில் கொள்ளையடிக்கும் நகைக்கடைகளை கண்காணிக்க ஒரு ஆய்வு குழுவை ஏற்படுத்தி ஆய்வு செய்து முறைப்படுத்தி மக்கள் வாழ்வில் நலன்களை காக்க வேண்டும்.” என்று அகில பாரத இந்து மகா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க