September 10, 2020
தண்டோரா குழு
சின்னத்திரையின் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்.
மதுரையை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜி.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வடிவேல் போன்று நடித்ததால் வடிவேலு பாலாஜியாக புகழ் பெற்றார்.
கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில்,மூளையில் ரத்தகசிவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சென்னை அரசு ராஜுவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு செய்தி பலரும் அதிர்ச்சியடைந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.