• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோல்வி பயத்தால் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கிறது – கோவையில் ஸ்டாலின் பேச்சு

May 6, 2019 தண்டோரா குழு

தோல்வி பயத்தால் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பட்டணம்புதூர், பட்டணம் பகுதிகளில் சூலூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் நடந்து வந்து வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமானோர் ஸ்டாலினோடு செல்பி எடுத்து கொண்டனர். மேலும் ஸ்டாலினுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பட்டணம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர்.உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறி விடும். எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உங்களைக் தேடி வர வேண்டும். நீங்கள் அவரைக் தேடி போக தேவையில்லை என்றார். அப்போது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் கொடுப்பதாக பட்டணத்தைக் சேர்ந்த குணசேகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதனால் தான் என ஸ்டாலின் பதிலளித்தார்.

பட்டணம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு குழந்தைகளுக்கு கண்மணி, அன்பழகன் என பெயர் சூட்டினார். கோவை பட்டணம் பொதுமக்களின் குறைகளைக் மனுக்களாக ஸ்டாலின் பெற்றார்.

இதையடுத்து பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின்,

அடிப்படை வசதிகள் ஏதுமில்லாதற்கு காரணம் அதிமுக ஆட்சி தான் எனவும், இந்த ஆட்சியைக் வீட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க