• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என தெரியவில்லை – குஷ்பூ

December 11, 2018 தண்டோரா குழு

தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என தெரியவில்லை என நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில், ‘இன்றை சட்டமன்ற தேர்தல் மூடிவுகளால் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் எங்களுக்கு ஏற்ப்படுத்தபோவதில்லை, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மிக குறைவான வாக்கு விதிசாயத்திலேயே பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது, எனவே இதை வெற்றிகரமான தோல்வி என்றுதான் சொல்ல முடியும்’ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இது மக்களின் வெற்றி என குஷ்பு கூறியுள்ளார். மேலும் தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என தெரியவில்லை என்று கூறிய குஷ்பு, 2019ல் மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க