• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோனி வீட்டில் சச்சினின் தீவிர ரசிகருக்கு விருந்து !

June 2, 2018 தண்டோரா குழு

இந்திய அணியின் அதிதீவிரமான ரசிகரும்,சச்சினின் தீவிர பக்தர்,என கூறப்படும் ரசிகர் ஒருவரைத் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து தோனி விருந்து கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி எங்கு விளையாடியாலும் உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி நிறத்தை பூசிக்கொண்டு,இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியபடிஒருவர் வந்துவிடுவார். போட்டியை டிவியில் பார்க்கும் எவரும் அவரை பார்க்காமல் இருந்திருப்பது கடினம்.அவர் வேறு யாரும் இல்லை இந்திய அணியின் அதிதீவிரமான ரசிகரும்,சச்சினின் தீவிர பக்தர்,என கூறப்படும் சுதீர் கவுதம்.

சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை சச்சின் தெண்டுல்கர் பலமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின்,அதைத் தொட்டுப்பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு எட்டாத ஒரு விஷயம்.2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின், சுதிர் கவுதமை அழைத்துச் சென்ற சச்சின் டெண்டுல்கர் அவருடன் கோப்பையை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அதைபோல் வீரர்களின் ஓய்வு அறைக்கு செல்வதும் ரசிகர்களால் முடியாது.ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஓய்வு அறைக்குள் அனுமதிக்கும் ஒரே ரசிகர் சுதிர் கவுதம் மட்டுமே.

இந்நிலையில்,2018ம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சி.எஸ்.கே அணி வீரர்கள் தங்கள் வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில்,கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனிசுதீர் கவுதமை ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து சிறப்பான விருந்து அளித்துள்ளார்.தோனியுடனும்,அவர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்ட சுதிர் கவுதம்,தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சுதிர் கவுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது,

“தோனியிடம் எதிர்பாராத விதமாக இருந்து எனக்கு அழைப்பு வந்தது.ராஞ்சியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் எனக்கு தோனியும்,அவரின் குடும்பத்தினரும் மிகசிறப்பான விருந்து அளித்துக் கவுரவித்தனர்.இந்நிகழ்வை வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாது.எனக்கு விருந்து வைத்து என்ன இன்ப அதிர்ச்சியில் திகைத்த வைத்த தோனிக்கும்,அவரின் மனைவி சாக்ஷிக்கும் எனது நன்றிகள். சிஎஸ்கே சாம்பியன் ஆன மகிழ்ச்சியில் குடும்பத்துடன் நேரத்தைப் போக்கும் தோனி இந்த நேரத்தில் ரசிகரை கவுரப்படுத்தியது பெருமையாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க