• Download mobile app
05 Apr 2026, SundayEdition - 3707
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலை மேலாண்மைக்காக 2 டிராக்டர் மற்றும் ஷ்ரெடிங் இயந்திரங்கள் கோவை மேயரிடம் வழங்கல்

March 15, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 69க்குட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பூங்கா வீதியில் கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு தோட்டக்கலை மேலாண்மைக்காக 2 டிராக்டர் மற்றும் ஷ்ரெடிங் இயந்திரங்களை தனியார் நிறுவனம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இடம் இன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் சேகரமாகும் தோட்ட கழிவுகள் மற்றும் மரக்கழிகவுகள் வெள்ளலூர் உரக்கிடங்கு கொண்டு செல்வதால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் எளிதில் தீப்பிடித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க அந்த பகுதியிலேயே மரக்கழிவு வகைகளை இதற்கான இயந்திரத்தால் பொடி செய்து வார்டு பகுதியிலேயே மரங்களுக்கு உரமாக பயன்படுத்தவும்,நுண் கழிவுகளுடன் சேர்த்து உரமாகவும் பயன்படுத்தவும் முடியும்.

இதனால் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு செல்லும் குப்பைகளின் அளவும் குறைக்கப்படுகிறது.இவ்வகையான இயந்திரம் மண்டலத்திற்கு 1 வீதம் 5 உள்ளது.தற்போது தனியார் நிறுவன நிர்வாகத்தில் சி.எஸ்.ஆர் நிதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 டிராக்டர் மற்றும் ஷ்ரெட்டிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ் குமார்,69 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார்,உதவி கமிஷனர் நிர்வாகம் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க