• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

April 18, 2017 தண்டோரா குழு

பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடிகள் கடன் வாங்கியிருந்தார்.

வங்கிகளில் வாங்கிய கடனை, விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அவர் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் மூலம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே அவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பித்துச் சென்றார்.

அங்கிருந்து அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவரை நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து,லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை கைது செய்து இந்திய அரசு முயற்சி செய்து வந்தது. இந்நிலையில், இன்று லண்டனில் விஜய் மல்லையாஇங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் படிக்க