• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிற்சாலை ஆய்வாக இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

November 13, 2020 தண்டோரா குழு

தொழிற்சாலை ஆய்வாக இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் 1லட்சத்து 53ஆயிரம் ரூபாய் சிக்கியது.

தொழிற்சாலை ஆய்வக இணை இயக்குனர் அலுவலகம் வட கோவை மேம்பாலம் தலைவாசல் காம்பிலக் சில் உள்ளது. இங்கு நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் டிஎஸ்பி கணேசன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தொழிற்சாலை ஆய்வக அதிகாரிகள் இல்லை அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் சோதனை நடத்தியதில் ரூ 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

மேலும் அந்த தொழிற்சாலை இணை இயக்குநர் வேணுகோபால் அறைக்கு பணத்துடன் வந்த தரகர் பிடிபட்டார். அவரிடமிருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரம் பிடிபட்டது. துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ரூ.23 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தகவலை தொடர்ந்து தொழிற்சாலை துறை அதிகாரிகள் யாரும் அலுவலத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் இணை இயக்குனர் வேணுகோபால், துணை இயக்குனர் சாந்தினி பிரியா, புரோக்கர் பனையப்பன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் புரோக்கர் பெயர் பனையப்பன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க