• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடருகிறது கூட்டணி; உ.பி.யை தொடந்து ம.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலகளிலும் அகிலேஷ் – மாயவதி கூட்டணி!

February 25, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் அறிவித்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் வரும் மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டனர். உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணியில் இந்த தேர்தலை சந்திப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதிக்கு 37, பகுஜன் சமாஜுக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் அஜித் சிங்கின் ராஷ் டிரிய லோக் தளத்துக்கு ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளன.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் 3 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும், எஞ்சிய 26 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி ஒரு தொகுதியிலும், பகுஜன் சமாஜ் கட்சி எஞ்சிய 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க