• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஷபீர் கரீமின் மனைவி கைது

October 31, 2017 தண்டோராகுழு

யு.பி.எஸ்.சி. தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஷபீர் கரீமின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான மெயின் தேர்வு நேற்று நடந்தது. இதில், நாங்குநேரி உதவி எஸ்.பி., சபீர் கரீம் என்பவர், பங்கேற்று தேர்வு எழுதினார். அப்போது, சபீர் கரீம் வசூல்ராஜா பட பாணியில் புளூடூத் மூலம் அவரது மனைவியிடம் பேசியபடி காப்பி அடித்து எழுதியது தெரியவந்தது. இதையடுத்து, எழும்பூர் போலீசார் சபீரை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த அவரது மனைவியிடமும் விசாரிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில்,தேர்வின் போது ப்ளூடூத் மூலம் காப்பியடிக்க உதவியதாக ஷபீர் கரீமின் மனைவி ஐதராபாத்தில் கைதானர்.

ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரியான இவர், ஐஏஎஸ் பதவிக்காக தேர்வு எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க