• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் வெற்றி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது – மோடி

March 11, 2017 தண்டோரா குழு

“உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி என்னை நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாயின. அதில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் சனிக்கிழமை கூறுகையில், “பா.ஜ.க. மீதான மக்கள் நம்பிக்கைக்கும், மக்கள் தரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்த மாபெரும் வெற்றி என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் அளித்துள்ள அளவிளான ஆதரவால் உவகை அடைந்தேன். இளைஞர்கள் அளித்துள்ள பேராதரவு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் மோடி.

மேலும் படிக்க