• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எடப்பாடி,பன்னீர் ஆகியோர் ராஜினாமா செய்வார்கள் – அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

May 6, 2019 தண்டோரா குழு

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எடப்பாடி,பன்னீர் ஆகியோர் ராஜினாமா செய்வார்கள் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
கோவை சௌரிபாளையம் பகுதியில் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காலையில் உச்சநீதிமன்றம் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. உச்சநீதிமன்றம் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டுள்ளது சபாநாயகர் தனபால் மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும். முன்னாள் சபாநாயகர் மதியழகன் 1972 ல் தான் பதவி விலகி தன் மீது நம்பிக்கையை கொண்டு வர தீர்மானம் கொண்டு வர சம்மதித்தார். இன்று சபாநாயகர் குழி தோண்டி புதைத்துள்ளார் இதற்கு மேலும் அவர் சபாநாயகராக தொடர வேண்டுமா என்பது எனது கேள்வி தஞ்சை இழப்பிற்கு இதுவரை மத்திய அர்சு எந்த நிதியையும் ஒதுக்க வில்லை. ஒடிசா பாதிப்புக்கு தேர்தல் விதி நடைமுறையில் இருக்கும் போதும் இரண்டாயிரம் கோடி மோடி ஒதுக்கியுள்ளார். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படக் கூடாது. தமிழகத்தில் எந்த ஒரு வாக்காளரும் அவருக்கு வாக்களித்தால் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதற்கு சமம்.

தஞ்சை பாதிப்புக்கு வரவில்லை,தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு வரவில்லை.ஆனால் ஒடிசாவிற்கு செல்கிறார்.சூலூரில் அமமுக விற்கும் திமுக விற்கும் தான் போட்டி நிலவுகிறது. திராவிட இயக்கத்தை ஊக்குவித்தவர்களுக்கு ஒரே கொள்கை தான் பாலம். அதிமுக ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுடையது தான் அதை மீட்டெடுப்பதில் தான் இன்னும் இருக்கிறோம்.

சபநாயகர் தனபால் சர்வாதிகாரி

திமுகவிற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுத்ததற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எடப்பாடி,பன்னீர் ஆகியோர் ராஜினாமா செய்வார்கள். மோடிக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் ஊடகங்கள் அதை மறைக்கின்றன 22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் டிடிவி முதல்வராக நாங்கள் நினைக்கிறோம் ஆட்சி போய் விட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அவர்களுடன் இருக்க மாட்டார்கள்.

எங்களுக்கு அரசியல் எதிரி திமுக தான்

கலைஞரால் அம்மா போல் செயல்பட முடியவில்லை கலைஞரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்று முடிவெடுத்தவர்கள் இவர்கள் தான். பன்னீர் செல்வம் தனது மகனை வடநாட்டில் பூத் வேலை பார்ப்பார் என்று கூறியுள்ளார். நடனமாடி ஓட்டு கேட்போம் என இங்குள்ள மணிகள் (அமைச்சர்கள்) வடநாட்டிற்கு ஓட்டு கேட்க செல்கிறார்கள். அதானி அம்பானி கொடுக்க முடியாததையெல்லாம் பாலம் பழனிசாமியும் ஜீரோ பன்னீர்செல்வமும் செய்துள்ளனர் எனக் கூறினார்.

மேலும் படிக்க