• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ரயில் மூலம் கோவை வந்த துணை ராணுவ படையினர்

March 16, 2019 தண்டோரா குழு

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் பாதுகாப்புப் பணிக்காக உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூரில் இருந்து துணை ராணுவ படையினர் இரு கம்பெனி போலீசார் ரயில் மூலம் கோவை வந்து உள்ளனர். மொத்தம் 168 பேர் வந்து உள்ளனர். அதில் ஒரு கம்பெனி போலீசார் கோவைக்கும் மற்றொரு கம்பெனி போலீசார் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இவர்கள் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதலாக துணை ராணுவப் படையினர் கோவை வருவார்கள் என காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க